கள்ளக்குறிச்சியை அடுத்து சென்னை மாணவி ஒருவர் தற்கொலை. பெரும் பரபரப்பு
கள்ளக்குறிச்சியில் இயங்கி வந்த தனியார் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மாணவிகள் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் பரபரப்பே இன்னும் தமிழகத்தில் நீங்காத நிலையில் அண்ணா பல்கலைக்கழக விடுதியில் தங்கி இருந்த பொறியியல் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்துள்ள தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் செராமிக் பொறியியல் பிரிவில் பி.டெக் 2ஆம் ஆண்டு பயின்று வரும் சண்முக ப்ரீத்தா என்பவர் நேற்று இரவு விடுதியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் விடுதியில் தங்கி இருந்த மாணவிகள், உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கூறியுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையின் மாணவி சண்முக ப்ரீத்தாவின் உடலைக் கைப்பற்றி அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் மருத்துவ சோதனைக்கு அனுப்பினர். ஆனால் அங்கு, சண்முக ப்ரீத்தாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறிவிட்டனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து செய்துள்ள கோட்டூர்புரம் காவல்துறையினர் மாணவி சண்முக ப்ரீத்தா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். அடுத்தடுத்த நாட்களில் நான்கு மாணவிகள் தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்டதால் தமிழக கல்லூரி மாணவிகளிடையே பெரும் சோகத்தை உண்டாக்கி உள்ளது.