கோஹ்லியின் பெங்களூரு அணியை விரட்டி அடித்த தல தோனி
நேற்று நடைபெற்ற பெங்களூர் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, முதலில் பந்துவீச தீர்மானித்தார். இதனால் முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி, டிவில்ல்லியர்ஸ் மற்றும் டீகாக் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்களில் 205 ரன்கள் எடுத்தது.
206 என்ற பெரிய இலக்கை நோக்கி விரட்டிய சென்னை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. வாட்சன், ரெய்னா, பில்லிங்ஸ் ஆகிய முன்னணி பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். ஆனாலும் தொடக்க ஆட்டக்காரர் ராயுடுவுடன் ஜோடி சேர்ந்த தல தோனி அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். தோனி 34 பந்துகளில் 70 ரன்களும், ராயுடு 53 பந்துகளில் 82 ரன்களும் அடித்ததால் சென்னை அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 207 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. தோனி ஆட்டநாயகன் விருதினை பெற்றார். இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.