சென்னையில் இன்று பேருந்துகள் இயங்குமா?
சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவை மார்ச் 31ம் தேதி வரை அமல்படுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை உத்தரவிட்டு இருக்கும் நிலையில் சென்னையில் 50 சதவீதம் பேருந்துக்கள் பயணிகளின் வசதிக்கு ஏற்ப இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
இருப்பினும் 3 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் வழக்கம் போல் காலை 5 மணி முதல் உள்ளூர் பேருந்துகள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் பேருந்துகளும், தமிழகத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
சென்னை காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் முழு அளவில் பேருந்துகள் இயங்கும் என்று கூறியிருப்பது ஆறுதல் என்றாலும் பொதுமக்கள் மிக அவசிய தேவை இருந்தால் மட்டுமே பயணம் செய்யவும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது