தனியார் வசமாகிறதா சென்ட்ரல் ரயில் நிலையம்! பயணிகள் கொதிப்பு

தனியார் வசமாகிறதா சென்ட்ரல் ரயில் நிலையம்! பயணிகள் கொதிப்பு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை மேம்படுத்தும் வகையில் அதன் பராமரிப்புக்காக தனியார் வசம் படிப்படியாக ஒப்படைக்கப்படும் என்று ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரங்கள் தூய்மை, உணவு கூடங்கள், வாகன நிறுத்துமிடம், கழிப்பறை, பூங்காக்கள் உள்பட பல பகுதிகளை பராமரிக்கும் பொறுப்பை தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் வரும் ஜூன் 30ஆம் தேதி முடிவாகும் என தெரிகிறது.

ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட வெளிநாட்டு தனியார் நிறுவனங்களும் அனுமதிக்கப்படும் என்றும், இதற்காக 45 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையம் தனியார் வசம் சென்றால் சேவை மனப்பான்மை என்பது மறைந்து லாப நோக்கத்துடன் செயல்படும் நிலை ஏற்படும் என்றும் இதனால் பயணிகள் பெருமளவில் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படுவார்கள் என்றும் ரயில்வே தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply