2016 ஜனவரி முதல் சென்ட்ரல் – விமான நிலையம் வரை மெட்ரோ ரயில். அதிகாரி தகவல்

 metro railசென்னை மெட்ரோ ரயில் பணிக்காக அமைக்கப்பட்டு வரும் சுரங்கப்பாதையில் திருமங்கலத்தில் இருந்து ஷெனாய் நகர் வரை நடைபெற்று வரும் நேற்றுடன் முடிவடைந்தது. எனவே வரும் 2016ஆம் ஆண்டு ஜனவரி முதல் சென்னை சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் இயங்கும் என கூறப்படுகிறது.

கடந்த 2007 ம் ஆண்டு ரூ.14,600 கோடி திட்ட மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட மெட்ரோ ரயில் பணி தற்போது ரூ.20 ஆயிரம் கோடியாக செலவில் அமைக்கப்பட்டு வருகிறது. 2 வழித் தடங்களில் மொத்தம் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இதில், 24 கி.மீ. தூரத்துக்கு (19 ரயில் நிலையங்கள்) சுரங்கப் பாதை யிலும், 21 கி.மீ. தூரத்துக்கு (13 ரயில் நிலையங்கள்) உயர்மட்ட ரயில் பாதையிலும் ரயில்கள் இயக்கப்படும்.

முதல்கட்டமாக ஷெனாய்நகர் – திருமங்கலம் இடையே சுரங்கம் தோண்டும் பணி நேற்று காலை 11.30 மணியுடன் முடிவடைந்தது. தரைமட்டத்தில் இருந்து 50 அடி ஆழத்தில் 6 மீட்டர் அளவுக்கு சுரங்கம் தோண்டிய ராட்சத இயந் திரம், திருமங்கலம் ரயில் நிலையத்தில் பூமியை துளைத்துக் கொண்டு வந்து, சுரங்கம் தோண்டும் பணியை நிறைவு செய்யப்பட்டதாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குநர் ராமநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கோயம்பேடு – ஆலந்தூர் இடையே உயர்மட்ட ரயில் பாதை அமைக்கும் பணி முழுமை அடைந்துள்ளது. இதில் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி முதல் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. ரயிலை 95 கி.மீ. வேகம் வரை இயக்கி வெற்றி கரமாக சோதனை ஓட்டம் நடத்தப் பட்டுள்ளது. பெங்களூரில் இருந்து சிறப்புக் குழுவினர் வந்து ஒரு வாரத்துக்கு ஆய்வு நடத்து வார்கள். இத்தடத்தில் மெட்ரோ ரயில் போக்குவரத்து வரும் மார்ச்சில் தொடங்கப்படும்.

இனி, ரயில் பாதைகள் போடும் பணி தொடங்கப்படும். பின்னர், திருமங்கலத்தில் இருந்து சாய்வு தளம் அமைக்கப்பட்டு, கோயம்பேடு மேம்பால ரயில் நிலையத்துடன் இணைக்கப்படும்.

சென்ட்ரல் – விமான நிலையம் தடத்தில் மெட்ரோ ரயில் 2016 ஜனவரி முதல் இயக்கப்படும். வண்ணாரப்பேட்டை சென்ட்ரல் – விமான நிலையம் தடம் உட்பட அனைத்து தடங்களிலும் பணிகள் முடிந்து 2017-ம் ஆண்டு முதல் இயக்கப்படும் என்றார்.

Leave a Reply