சென்னை: ஆசிரியை கன்னத்தில் அறைந்த மாணவன். காது ஜவ்வு கிழிந்ததால் பெரும் பரபரப்பு.

 slapsசென்னை பள்ளி ஒன்றில் மாணவர் ஒருவர் ஆசிரியரை கன்னத்தில் அடித்ததால் ஆசிரியையின் காது ஜவ்வு கிழிந்துபோனதால் ஆசிரியர்களின் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்டதை அடுத்து ஏற்பட்ட பரபரப்பு மறைவதற்குள் ஆசிரியை ஒருவரின் காது ஜவ்வு கிழியும்படி மாணவர் ஒருவர் அடித்துள்ளார். சென்னை மதுரவாயலில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கம்ப்யூட்டர் ஆசிரியையாக பணிபுரிந்து வரும் லட்சுமி என்பவர் நேற்று மாலை வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது, கம்ப்யூட்டரை ஆப் செய்துவிட்டு பக்கத்தில் இருந்த மாணவருடன் பேசிக்கொண்டிருந்த ஆகாஷ் என்ற மாணவரை கண்டித்தார். இதனால் கடும் ஆத்திரம் அடைந்த மாணவன் ஆகாஷ், திடீரென ஆசிரியையின் கன்னத்தில் பளார் என அறைந்ததால் ஆசிரியை நிலை தடுமாறினார்.

பின்னர் ஆசிரியை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொண்டபோதுதான் அவருக்கு காது ஜவ்வு கிழிந்து இருப்பதாகவும், இதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் தெரிய வந்தது. இதுகுறித்து ஆசிரிய லட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் மாணவர் ஆகாஷிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து மாவட்ட கல்வி துறை அதிகாரி சுவாமிநாதன் அவர்களும் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

விசாரணையில் இதே மாணவன் ஏற்கனவே கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஒரு ஆசிரியையை தாக்கியுள்ளதாகவும் அதன்பின்னர் மன்னிப்பு கடிதம் கொடுத்ததால் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டதாகவும் தெரியவந்தது.தற்போது மாணவன் ஆகாஷை பள்ளியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1vjVJse” standard=”http://www.youtube.com/v/r2OSFeBC8HQ?fs=1″ vars=”ytid=r2OSFeBC8HQ&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep3027″ /]

Leave a Reply