தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம். சென்னை மாவட்டத்திற்கு புதிய கலெக்டர்
தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் திடீரென மாற்றப்பட்டு வரும் நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் 8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் மற்றும் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாவட்ட கலெக்டராக இருந்த கோவிந்தராஜ் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக சென்னை மாவட்ட கலெக்டராக ஐ.ஏ.எஸ் அதிகாரி மகேஸ்வரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநராக இருந்த ராஜேஸ் அதிலிருந்து விடுவிக்கப்பட்டு, கடலூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடலூர் கலெக்டராக இருந்த ஞானசேகரன் கூட்டுறவு சங்க பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் நிதித் துறை இணை செயலாளராக இருந்த பிரசாந்த் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த பதவியில் இருந்த எஸ்.பழனி வருவாய் துறையில் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் துறை ஆணையராக இருந்த எல்.சுப்ரமணியன் விழுப்புரம் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த பொறுப்பில் இருந்து திருமதி லக்ஷ்மி விடுவிக்கப்பட்டுள்ளார்.
பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையராக மந்திரி கோவிந்தராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேற்கண்ட நியமனங்களுக்கான உத்தரவை தமிழக அரசு நேற்று பிறப்பித்துள்ளது.