சென்னையில் இருந்து மாற்றப்படுகிறார்களா கொரோனா நோயாளிகள்?

பரபரப்பு தகவல்

சென்னையில் உள்ள கொரனோ நோயாளிகள் வேறு நகரத்திற்கு மாற்ற இருப்பதாகவும், அனேகமாக அவர்கள் திருச்சிக்கு மாற்றப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

திருச்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட குடிசை மாற்று வாரிய வீடுகள் தற்போது வரை காலியாக இருப்பதாகவும் 384 வீடுகள் கொண்ட இந்த குடிசை மாற்று வாரிய வீடுகளில் சென்னையில் உள்ள நோயாளிகளை தங்கவைக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது

திருச்சி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் இன்று திடீரென குடிசை மாற்று வாரிய வீடுகளை சென்று ஆய்வு செய்ததால் இந்த சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது

இருப்பினும் இதுகுறித்த தகவலை சுகாதாரத்துறை அதிகாரிகள் இன்னும் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply