சென்னை தண்ணீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு. மாநகராட்சி அதிரடி

சென்னை தண்ணீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு. மாநகராட்சி அதிரடி

ஒவ்வொரு வருடமும் கோடையில் சென்னை மக்கள் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக கடும் அவதிப்படுகின்றனர். ஆந்திராவில் இருந்து கிருஷ்ணா நீர் வந்தால் ஓரளவு நிலைமை சமாளிக்கப்படும் இல்லையேல் பெரும் திண்டாட்டம் தான். இந்த நிலையில் சென்னை மாநகராட்சியின் அதிரடி திட்டத்தால் இனிமேல் சென்னைக்கு தண்ணீர் பிரச்சனை இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை நகரின் தண்ணீர் தேவைக்காக தமிழக அரசு சார்பில் சிக்கராயபுரம், அனகாபுத்தூர் மற்றும் திரிசூலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கல்குவாரியில் உள்ள தண்ணீரை எடுத்து சென்னை மக்களுக்கு வழங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இதற்காக 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு குழாய்கள் அமைக்கப்பட்டு செம்பரம்பாக்கம் ஏரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து சென்னை மக்களுக்கு இன்று முதல் குடிநீர் விநியோகம் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் தொடர்ந்தால் இனி சென்னைக்கு தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply