சென்னையில் உள்ள அனைத்து தனியார் கட்டடங்களிலும்மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் இதுவரை மழைநீர் சேகரிப்பு இல்லாத கட்டிடங்களில் உடனடியாக மழைநீரை சேகரிக்கும் தொட்டி அமைக்கப்படாவிட்டால் அந்த கட்டிடங்களுக்கு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது
இதுகுறித்து சென்னை மாநகராட்சி இன்று விடுத்துள்ள அறிவிப்பு ஒன்றில் ”சென்னையில் உள்ள தனியார் கட்டடங்களில் கட்டாயம் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அவ்வாறு மழைநீர் சேகரிப்புத் தொட்டி அமைக்காத கட்டடங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், மழைநீரை சேகரிக்காத கட்டடங்களின் குடிநீர் இணைப்புகளும் துண்டிக்கப்படும். மழைநீர் சேகரிப்புத் தொட்டி இருந்தால் மட்டுமே புதிய கட்டடங்களுக்கு அனுமதி அளிக்கப்படும்” எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், மழைநீர் சேகரிப்பை உறுதி செய்ய மண்டல செயற்பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ள மாநகராட்சி, மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை ஆய்வு செய்ய மெட்ரோ வாட்டர் நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.