சென்னை எழும்பூர் கோர்ட் அருகே நள்ளிரவு நேரத்தில் வழக்கறிஞர் ஸ்டாலின் மீது பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டதால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பெரும் பதட்டம் நிலவுகிறது.
நீதிமன்ற வக்கீல் சங்கத் தலைவருக்கான தேர்தல் நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று இரவு எண்ணப்பட்டு வழக்கறிஞர் சந்தன் பாபு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
தேர்தல் முடிவு தெரிந்ததும், வழக்கறிஞர் சந்தன் பாபு ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். வில்லிவாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலினும் இந்த கொண்டாட்டத்தில் பங்குகொண்டார். வெற்றி கொண்டாட்டம் பயங்கர குஷியாக நடந்து கொண்டிருந்தபோது, சந்தன் பாபுவிடம் தோல்வி அடைந்த வழக்கறிஞர் தரப்பு பயங்கர ஆயுதங்களால் தாக்கியதாகவும், இந்த தாக்குதலில் வழக்கறிஞர் ஸ்டாலின் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த ஸ்டாலினை சென்னை ராஜீவ் காந்த் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவருடன் இருந்தவர் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.