டீ-ரூ.20, 20லி வாட்டர் கேன் ரூ.100. வெள்ளத்தால் கொள்ளையடிக்கும் வியாபாரிகள்
சென்னையில் கனமழை, வெள்ளம் ஆகியவற்றை தொடர்ந்து மக்கள் சந்திக்கும் இன்னொரு பிரச்சனை விலைவாசி. மக்களின் அவசிய தேவையை தெரிந்து கொண்டு வியாபாரிகள் கொள்ளை லாபத்துடன் பொருட்களை விற்றுவருகின்றனர்.
பால் பாக்கெட் ரூ.100, சிங்கிள் டீ ரூ.20, வாட்டர் கேன் ரூ.100 என வாய்க்கு வந்தபடி அவர்கள் சொன்னதுதான் விலை என்றாகிவிட்டது. வசதியானவர்கள் மறுபேச்சில்லாமல் சொன்ன விலைக்கு வாங்கி செல்கின்றனர். ஆனால் ஏழை எளிய மக்கள் இந்த திடீர் விலையுயர்வை கண்டு அதிர்ச்சியில் உள்ளனர்.
இன்று காலை தினசரி பேப்பர்கள் கூட ரூ.10 மற்றும் ரூ.20க்கு விற்கப்பட்டன. நகர்முழுவதும் மின்சாரம் இல்லாததால் மெழுகுவர்த்தி விலை உச்சத்தை அடைந்துள்ளது. இதேப்போன்று காய்கறிகளின் விலையும் உச்சத்தில் சென்றுகொண்டிருக்கின்றன.