இந்தியா ப்ராப்பர்ட்டி டாட் காம் நிறுவனத்தின் ‘கிரஹப்பிரவேசம்’ 52வது கண்காட்சி சென்னையில் நடந்து முடிந்துள்ளது. சென்னையில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் இந்த 2 நாள் கண்காட்சியை இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தமிழக பிரிவு தலைவரும், நவின்’ஸ் குழுமத்தின் மேலாண் இயக்குனருமான டாக்டர் ஆர்.குமார் தொடங்கி வைத்தார். இதில் சென்னை மற்றும் கேரளாவை சேர்ந்த 150 முன்னணி பில்டர்களின் 400க்கும் அதிகமான புதிய ப்ராஜக்ட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
பிரின்ட், டிஜிட்டல் என இரு வடிவிலும் எளிதாக பயன்படுத்தும் வகையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட 3டி பேனோ எக்ஸ் என்ற இந்தியா ப்ராப்பர்ட்டியின் அப்ளிகேஷனை பயன்படுத்தி டெவலப்பர்களும், பில்டர்களும் ப்ராஜக்ட்கள் குறித்து விளக்கம் அளித்தனர். இந்தியா ப்ராப்பர்ட்டி டாட் காம் உருவாக்கிய ‘வர்ச்சுவல் பிராப்பர்ட்டி சுற்றுலா’ தொழில்நுட்ப சேவையும் பார்வையாளர்களுக்கு பயனுள்ளதாக இருந்தது.
வீடு வாங்க விரும்புவோரின் தேவையை அறிந்து, ‘குரூப் சைட் விசிட்’ என்ற புதிய சேவையையும் இந்தியா ப்ராப்பர்ட்டி டாட் காம் இக்கண்காட்சியில் அறிமுகப்படுத்தியது.
இந்தியா ப்ராப்பர்ட்டி டாட் காம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கணேஷ் வாசுதேவன்,‘‘ப்ராப்பர்ட்டி வாங்குவது என்பதற்கு மேலாக, குரூப் சைட் சுற்றுலா, புதிய 3டி பேனோ எக்ஸ் அப்ளிகேஷன், வர்ச்சுவல் ப்ராப்பர்ட்டி சுற்றுலா ஆகியவை மக்களின் வீடு தேடும் படலத்தை மிக எளிதாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்றியிருக்கும். பலரும் இதில் ஆர்வத்துடன் பங்கேற்று பயனடைந்திருக்கின்றனர். போரூர், முகப்பேர், அண்ணா நகர், ஓ.எம்.ஆர்., தாம்பரம், ஜி.எஸ்.டி. சாலை, வேளச்சேரி ஆகிய இடங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தன. சென்னையில் வீடு வாங்க விரும்புவோருக்கும் பில்டர்களுக்கும் ஒரு சிறந்த பாலமாக கிரஹப்பிரவேசம் கண்காட்சி அமைந்ததில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி’’ என்றார்.