பத்திரிகையாளர்களை நோக்கி துப்பிய விவகாரம். விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு

பத்திரிகையாளர்களை நோக்கி துப்பிய விவகாரம். விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு

vijayakanthகடந்த டிசம்பர் 27-ம் தேதி சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த விஜயகாந்த், அப்போது செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்வியினால் ஆத்திரமடைந்து, பத்திரிகையாளர்களை பார்த்து ‘தூ..’ என்று துப்பினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் செய்தியாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது. அனைத்து ஊடகங்களையும் விஜயகாந்த் இழிவு படுத்தியதாக அவர் மீது கடும் கண்டனங்கள் எழுந்தன.

இந்நிலையில் தேவராஜன் என்ற பத்திரிகையாளர் விஜய்காந்த் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து காவல்துறையில் புகார் மனு அளித்தார். ஆனால் போலீசார் இந்த மனுமீது நடவடிக்கை எடுக்காததை அடுத்து அவர் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில்,  விஜயகாந்த் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுப்பையா, “ இந்த விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க போதுமான ஆதாரங்கள் இருப்பதாகவே தெரிகிறது. எனவே காவல்துறை  சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கு பதிவு செய்ய போதுமான முகாந்திரம் இல்லையெனில் இது குறித்தும் புகார்தாரருக்கு தெரிவிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

Leave a Reply