இளங்கோவனுக்கு ஜாமீன் நிபந்தனையை தளர்த்த சென்னை ஐகோர்ட் மறுப்பு
பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது சமீபத்தில் வளர்மதி என்ற பெண் மிரட்டல் புகார் கொடுத்தார். இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீன் பெற்ற இளங்கோவன் நேற்று மதுரை தல்லாகுளம் காவல்நிலையத்தில் கையெழுத்திட சென்றபோது மதுரை அதிமுகவினர் அவர் சென்ற கார் மீது செருப்பு, முட்டை ஆகியவற்றை வீசினர். இதனால் நேற்று மதுரையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் இரண்டாவது நாளாக தல்லாக்குளம் காவல் நிலையத்தில் இளங்கோவன் இன்றும் கையெழுத்திட்டார். இதனிடையே, முன்ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக்கோரி இளங்கோவன் தாக்கல் செய்த மனுத சென்னை ஐகோர்ட்டின் இன்று விசாரணைக்கு வந்தது. ஆனால் நிபந்தனையை தளர்த்த சென்னை ஐகோர்ட் மறுத்ததோடு, இளங்கோவனுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
மேலும், காவல் நிலையத்தில் கையெழுத்திட செல்லும்போது இளங்கோவனுடன் 2 வழக்கறிஞர்கள் செல்லலாம் என்றும், கையெழுத்திட வரும் காட்சியை காவல்துறையும், இளங்கோவன் தரப்பும் வீடியோ பதிவு செய்யலாம் என்றும் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.