ஆர்.கே.நகரில் தினகரன் வெற்றி குறித்த வழக்கு: நீதிமன்றம் அதிரடி
சென்னை ஆர்.கே.நகரில் திராவிட கட்சிகளை பின்னுக்கு தள்ளி சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய டிடிவி தினகரன் மிகப்பெரிய வெற்றியை அடைந்தார். அவர் ஜெயலலிதா பெற்ற வாக்கு வித்தியாசத்தை விட அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் அதிர்ச்சி அடைந்தன
இந்த நிலையில் தினகரன் வெற்றி செல்லாது என்று அறிவிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் மனுதாரரின் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
ஆர்.கே.நகரில் டி.டி.வி. தினகரன் வெற்றி பெற்றதற்கு முறைகேடுகள் தான் காரணம் என்றால் மனுதாரர் தேர்தல் ஆணையத்திடம் முறையிடலாம் என சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தி மனுவை தள்ளுபடி செய்தது. இதனால் தினகரன் தரப்பினர் உற்சாகத்துடன் உள்ளனர்.