தமிழக அரசின் அவதூறு வழக்கு. விஜயகாந்துக்கு சென்னை ஐகோர்ட் அபராதம்.

vijayakanthதமிழக அரசு தன் மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றக் கோரி தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்து அதற்கு கால அவகாசம் கேட்டார். இதனால் அவர் நீதிமன்ற நேரத்தை வீணடித்ததாக குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு சென்னை ஐகோர்ட் ரூ.2000 அபராதம் விதித்துள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் மீது தமிழக அரசு 12 அவதூறு வழக்குகளை இதுவரை பதிவு செய்துள்ளது. இந்த வழக்குகள் அனைத்தும் சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்று வரும் நிலையில் அனைத்து வழக்குகளையும் சுப்ரீம் கோர்ட்டின் அமர்வுக்கு தாங்கள் மாற்றிக் கொள்வதாக விஜயகாந்த் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி கவுல், நீதிபதி எஸ்.எஸ். சுநதரேஷ் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு கால அவகாசம் வழங்கியது.

நீதிமன்றம் கொடுத்த கால அவகாசம் இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், மேலும் அவகாசம் வேண்டும் என்றும் விஜயகாந்த் தரப்பில் கோரிக்கை எழுப்பப்பட்டது. ஆனால் இதனை கேட்ட சென்னை ஐகோர்ட் முதன்மை அமர்வு, நீதிமன்ற நேரத்தை வீணடித்தற்காக வழக்கொன்றுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதமாக விஜயகாந்த் செலுத்த வேண்டும் என்று அதிரடியாக கூறியதோடு சுப்ரீம் கோர்ட்டுக்கு வழக்குகளை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், விஜயகாந்தின் மனு தள்ளுபடி செய்யப்படும் என்றும் நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply