கடந்த மாதம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அதிகளவிலான பணப்பட்டுவாடா நடைபெற்றுள்ளதால் தமிழகம் முழுவதும் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனுதாக்க செய்தார். அந்த மனுமீதான விசாரணை இன்று நடந்தது. அந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
வழக்கறிஞர் தமயந்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் தேர்தலின்போது முறைகேடாக வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்துளது. எனவே தமிழகத்தில் மறுதேர்தல் நடத்தவேண்டும் என்ற மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, “வாக்கு எண்ணிக்கை நடக்கவிருக்கும் கடைசி நேரத்தில் மனுதாரர் இந்த மனுவை தாக்கல் செய்திருப்பதாகவும், தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கிவிட்ட பிறகு அதில் நீதிமன்றம் தலையிட முடியாது” என்று கூறி வழக்கறிஞர் தமயந்தியின் மனுவை நிராகரித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.