ஐபிஎல் போட்டிகள் வேறு இடத்திற்கு மாற்றமா? சென்னை ரசிகர்கள் அதிர்ச்சி

ஐபிஎல் போட்டிகள் வேறு இடத்திற்கு மாற்றமா? சென்னை ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் சென்னையில் நடைபெறும் மற்ற போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

சென்னையில் மொத்தம் ஏழு போட்டிகள் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் நேற்று ஒரு போட்டி நடைபெற்றது. மீதமுள்ள 6 போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் ஐ.பி.எல் நிர்வாகிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். திருவனந்தபுரம் அல்லது புனே ஆகிய மைதானங்கள் பரிசீலனையில் இருந்து வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply