சிலை கடத்தல் மன்னன் தீனதயாள் இரண்டு வாரத்திற்கு முன்பே கைதா? பரபரப்பு தகவல்

சிலை கடத்தல் மன்னன் தீனதயாள் இரண்டு வாரத்திற்கு முன்பே கைதா? பரபரப்பு தகவல்

deenadayalan01கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சிலை கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியும் ஆந்திர தொழிலதிபருமான தீனதயாளன் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்த அவர் சில நாட்களுக்கு முன் சரண் அடைந்ததாகவும், அவரிடம் போலீஸார் கடந்த இரண்டு வார காலமாக விசாரணை நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் அவரை நேற்றுதான் அதிகாரபூர்வமாக போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து, அவர் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

சமீபத்தில், சென்னை ஆழ்வார்பேட்டை, மூரே தெருவில் ஏராளமான சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை வெளிநாடுகளுக்கு கடத்த இருப்பதாகவும் சிலை தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் அதிரடி சோதனை செய்தனர். அப்போது தீனதயாள் வீட்டில் அருங்காட்சியகம் போல 300-க்கும் மேற்பட்ட சிலைகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் அந்த சிலைகளை பறிமுதல் செய்ததோடு, அங்கு இருந்த ரஞ்சித், மான்சிங், குமார் ஆகிய மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், பல்வேறு பகுதிகளிலிருந்து சிலைகள் கொள்ளையடித்து இங்கு கொண்டு வரப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்ததும், இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபர் தீனதயாளன் என்பதும் தெரியவந்தது.

Leave a Reply