சென்னை மேயர் சைதை.துரைச்சாமி நீக்கமா? அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு.

saidai duraisamyசென்னை மேயர் பதவியில் இருந்து சைதை துரைசாமி திடீரென ராஜினாமா செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சைதை துரைசாமியின் பெயரை அதிமுகவின் போஸ்டர்களில் போடக்கூடாது என அதிமுக நிர்வாகிகளுக்கு ரகசிய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

துரைசாமி தரப்பில் இந்த தகவலை உறுதிப்படுத்தப்படவில்லை என்றபோதிலும், அவரிடம் ராஜினாமா கடிதம் பெறப்பட்டிருப்பதாகவும், அல்லது இனிமேல் பெற்றுக்கொள்ள இருப்பதாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேசமயத்தில், துணை மேயர் பெஞ்சமினை போயஸ் தோட்டத்துக்கு அவசரமாக வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அவரே விரைவில் சென்னை மேயராக பொறுப்பேற்க வாய்ப்பு இருப்பதாகவும் அதிமுக நிர்வாகிகளின் மத்தியில் கூறப்பட்டு வருகின்றன.

துரைசாமி மீதான போயஸ்தோட்டத்தின் அனல் வீச்சிற்கு காண்ட்ராக்ட் விவகாரம் ஒன்றும்  முக்கிய  காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதற்கிடையே பத்திரிகை ஒன்றின் சார்பில் சென்னை சிறந்த நகரமாக தேர்ந்து எடுக்கப்பட்டு வழங்கப்படும் விருதை பெறுவதற்காக மேயர் சைதை துரைசாமி டெல்லி சென்றுள்ள நிலையில், அவர் சென்னை திரும்பியவுடன் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply