காற்றழுத்த தாழ்வு எதிரொலி: நவம்பர் 14 வரை கனமழை!

காற்றழுத்த தாழ்வு எதிரொலி: நவம்பர் 14 வரை கனமழை!

தமிழ்நாட்டில் நவம்பர் 14ஆம் தேதி வரை கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதை அடுத்து சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை நல்ல மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்