கண்டக்டர்கள் உட்கார்ந்து கொண்டு டிக்கெட் கொடுக்க கூடாது: அதிகாரிகள் எச்சரிக்கை
சென்னை போன்ற பெருநகரங்களில் கண்டக்டர்கள் தங்களுக்கென வைக்கப்பட்டிருக்கும் சீட்டில் உட்கார்ந்து கொண்டு பயணிகளிடம் டிக்கெட் கேட்டு வருவதில்லை என்ற புகார் பயணிகள் மத்தியில் இருந்து வருகிறது. கூட்டம் அதிகமான நேரங்களில் டிக்கெட்டை வாங்க சகபயணிகளிடம் காசை பாஸ் செய்துதான் பலர் டிக்கெட் வாங்குகின்றனர்.
இந்த நிலையில் கண்டக்டர்கள் உட்கார்ந்து கொண்டு டிக்கெட் வழங்கக்கூடாது என்றும் பயணிகளை தேடி சென்று டிக்கெட் வழங்க வேண்டும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கண்டக்டர்கள் இருக்கையில் அமர்ந்து கொண்டே டிக்கெட் வழங்குவதால் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருப்பதாகவும், போக்குவரத்து துறைக்கு அதிக நஷ்டம் ஏற்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கண்டக்டர்கள் உட்கார்ந்து கொண்டு டிக்கெட் வழங்கினால் 94450 30516 என்ற எண்ணில் புகார் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.