திருமாவளவன் மீது சென்னை போலீசார் திடீர் வழக்குப்பதிவு

திருமாவளவன் மீது சென்னை போலீசார் திடீர் வழக்குப்பதிவு

சமீபத்தில் தமிழக அரசு அறிவித்த பேருந்து கட்டண உயர்வுக்கு ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு நாளில் போராட்டங்களை நடத்தி வருகிறது. எந்த கட்சியின் போராட்டமும் பேருந்து கட்டணத்தை குறைக்க போவதில்லை என்பதும் இந்த போராட்டத்தினால் பொதுமக்களுக்குத்தான் இடையூறு என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று பேருந்து கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகிறது. இந்த நிலையில் இந்த போராட்டத்திற்கு ஆட்களை ஆட்டோக்களில் அந்த கட்சியினர் திரட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து போராட்டத்துக்கு மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் விடுதலை சிறுத்டை கட்சியினர் சென்னை மெரினாவில் ஆட்டோக்களில் ஆட்களை அழைத்துச் சென்றதாக வந்த புகாரின் அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீது அண்ணா சதுக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply