கல் எறிந்தவர்கள், ஆட்டோவை எரித்தவர்கள் வாடகை போலீசா? திடுக்கிடும் தகவல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் கடைசி நாள் அன்று சென்னையில் பல இடங்களில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையின்போது அப்பாவிகள் வீடுகளுக்கு தீவைப்பது, ஆட்டோக்களுக்கு தீவைப்பது, ஆகியவைகளை போலீசே செய்ததாக வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் இதுகுறித்து விசாரணை செய்துள்ள காவல்துறை கலவரத்துக்கு முதல்நாளில் கோடம்பாக்கத்தில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 60க்கும் மேற்பட்டோர் காவல்துறை உடைகளை வாடகைக்கு எடுத்துச்சென்றுள்ளனர் என்பதை கண்டுபிடித்துள்ளனர். இந்த வாடகை உடை போலீஸ்தான் வன்முறையில் ஈடுபட்டது என்றும், ஒரிஜினல் போலீசார் கலவரத்தை அடக்க மட்டுமே செய்தனர் என்றும் போலீஸ் சமூக இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.
இருந்தும் காவல்துறை சார்பில் யாரேனும் தவறு செய்திருந்தால் நிச்சயம் அவர்கள் தேடிப்பிடித்து தண்டிக்கப்படுவார்கள் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.