சென்னையின் கனமழை: சாலைகளில் வெள்ளம்

சென்னையின் கனமழை: சாலைகளில் வெள்ளம்

சென்னையின் பல பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருவதையடுத்து சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

வடகிழக்கு பருவமழை சமீபத்தில் தொடங்கியது. இதனால் சென்னை உள்பட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் சற்றுமுன் சென்னையின் முக்கிய பகுதிகளான மெரினா கடற்கரை, அண்ணா சாலை, எழும்பூர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அடையாறு, கோடம்பாக்கம், பிராட்வே ஆகிய பகுதிகளில் கனமழை மழை பெய்து வருகிறது

அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு சென்னையில் மேலும் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.