சென்னையை சேர்ந்த தமிழ்ப்பத்திரிகையாளர் ஒருவர் இலங்கையில் ராணுவ முகாமை புகைப்படம் எடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு அதிரடியாக கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் நடந்த இறுதிப்போர் குறித்து வார இதழ் ஒன்றில் தொடர் கட்டுரை எழுதிய சென்னையை சேர்ந்த தமிழ் பத்திரிகையாளர் தமிழ் மகா பிரபாமரன் என்பவர் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து அங்குள்ள தமிழ் தலைவர்களை சந்தித்து பேசியுள்ளார். பின்னர் அவர்களுடன் சேர்ந்து கிளிநொச்சியில் உள்ள ராணுவ முகாமை சுற்றிபார்த்து வந்த அவர், ராணுவ முகாமை புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது திடீரென சுமார் 50 இலங்கை ராணுவ வீரர்கள் அவரை சூழ்ந்துகொண்டு கைது செய்தது. அவருடன் தமிழ்தேசிய கூட்டமைப்பின் எம்.இ ஸ்ரீதரன், வடமாகாண சபை உறுப்பினர் பசுபதி பிள்ளை, மற்றும் தயாபரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
தமிழ் பிரபாகரனுடன் கைது செய்யப்பட்ட தலைவர்கள் சிலமணி நேரங்களில் விடுவிக்கப்பட்டாலும், அவர் மட்டும் விடுவிக்கப்படவில்லை. அவரிடம் ராணுவ வீரர்கள் துருவி துருவி விசாரணை செய்து வருகின்றனர். அவருடைய கேமராவும் கைப்பற்றபட்டது.
இந்த கைது சம்பவம் தமிழ் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துமீறி கைது செய்யப்ப்பட்ட தமிழ் பிரபாகரனை உடனே நிபந்தனையின்றி விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.