சினிமா நட்சத்திரங்களுக்கு இடையே நடக்கும் செலிபிரட்டி கிரிக்கெட் போட்டியில் (ஸீக்ல்) விஷால் தலைமையிலான சென்னை ரினோஸ் அணி, மும்பை அணியை வெற்றி பெற்றது.
முதலில் பேட் செய்த மும்பை ஹீரோஸ் அணி 20 ஓவர்களில் 164 ரன்கள் எடுத்தது. பின்னர் 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை ரினோஸ், 19.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்குகள் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னை ரினோஸ் அணியில் துவக்க ஆட்டக்காரராக விளையாடிய அணியில் துணை கேப்டன் விக்ராந்த், மற்றும் சரண் ஆகியோர்களின் அதிரடி பேட்டிங்கால் சென்னை ரினோஸ் அணி வெற்றி பெற்றது. சரண் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். சென்னை ரினோஸ் அணிக்கு அம்பாசிடராக நடிகை த்ரிஷா நியமிக்கபட்டுள்ளார்.
சென்னை ரினோஸ் அணியில் விஷால், ஜீவா, சிவா, சஞ்சய், சாந்தனு, பிரித்வி, ரமணா, ஸ்ரீகாந்த், ஷ்யாம், பரத், ஜித்தன் ரமேஷ், உதய், மற்றும் பொஸ் வெங்கட ஆகியோர் விளையாடினர்.