நேற்று சென்னை ரைனோஸ் மற்றும் கேரள ஸ்டிரைக்கர்ஸ் அணிகளுக்கிடையே விறுவிறுப்பாக நடந்த சிசிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை ரைனோஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனால் அந்த அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கேரள ஸ்டிரைக்கர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களீல் 150 ரன்கள் குவித்தது. பென்னி 72 ரன்களூம், ஸ்லிபா 31 ரன்களூம் குவித்தனர்.
151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை ரைனோஸ் 20 ஓவர்களீல் 138 ரன்கள் மட்டுமே எடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. விக்ராந்த் 77 ரன்களும், விஷ்ணூ 30 ரன்களும் எடுத்தனர். இவர்கள் இருவரை தவிர வேறு யாரும் இந்த போட்டியில் சோபிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கேரள அணியின் அபார வெற்றி காரணமாக அந்த அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஆனால் சென்னை ரைனோஸ் அணி 3 புள்ளிகளுடன் பின் தங்கியுள்ளது. போஜ்புரி அணியுடனான போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே சென்னை ரைனோஸ் அணிக்கு அரையிறுதி வாய்ப்பு உள்ளது. இதனால் சென்னை அணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.