வீடு இல்லாதவர்கள் எங்கு தங்குவது? சென்னை மாநகராட்சி அறிவிப்பு

வீடு இல்லாதவர்கள் எங்கு தங்குவது? சென்னை மாநகராட்சி அறிவிப்பு

கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவாமல் இருக்கும் வகையில் தமிழக அரசு அவ்வப்போது தீவிர நடவடிக்கை எடுத்து வருவது குறித்து செய்திகளை பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க அனைத்து பொதுமக்களும் வீட்டிலேயே தங்கி இருக்க வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் வீடு இல்லாமல் பிளாட்பாரத்தில் தங்குபவர்கள் என்ன செய்வது? என்ற கேள்வி எழுந்து உள்ளது

இதனை அடுத்து சென்னை மாநகராட்சி ஆணையர் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். வீடு இல்லாமல் இருப்பவர்கள் உடனடியாக சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான காப்பகங்களில் தங்கி கொள்ளலாம் என்றும் கொரோனா பரபரப்பு முடியும் வரை அவர்களுக்கு அங்கு தங்க அனுமதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்
இதனை அடுத்து பிளாட்பாரம் மற்றும் சாலையோரங்களில் தங்கியிருப்பவர்கள் உடனடியாக மாநகராட்சிக்கு சொந்தமான காப்பகத்துக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

Leave a Reply