ரூ.400 கோடி நஷ்டத்திலும் சம்பளத்தை சரியான நேரத்தில் போட்ட சென்னை சில்க்ஸ்
சென்னை தி.நகர். சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடையில் தொடர்ந்து இரண்டு நாட்களாக எரிந்த தீ தற்போதுதான் முழு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. தற்போது கட்டிடத்தை இடிக்கும் பணியில் தீயணைப்பு துறையினர், காவல்துறையினர், பொதுப்பணி துறையினர், ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்த தீவிபத்தால் ரூ.400 கோடி சென்னை சில்க்ஸ் உரிமையாளருக்கு நஷ்டம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய நஷ்டம் ஏற்பட்டபோதிலும் நேற்று மிகச்சரியாக அனைத்து ஊழியர்களுக்கும் சென்னை சில்க்ஸ் நிர்வாகம் சம்பளம் போட்டுள்ளது. அதுமட்டுமின்றி சென்னை சில்க்ஸ், குமரன் நகை மாளிகையின் மற்ற கிளைகளுக்கு சென்னை ஊழியர்களை வேலைக்கு அனுப்பியுள்ளது. இதனால் சென்னை சில்க்ஸ் ஊழியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
பள்ளி, கல்லூரி திறக்கவுள்ள இந்த சமயத்தில் இந்த தீவிபத்து திடீரென ஏற்பட்டதால் இந்த மாத சம்பளம் மற்றும் வேலை என்னவாகுமோ என்ற அச்சமடைந்திருந்த ஊழியர்களுக்கு ஆறுதல் கூறியுள்ள சென்னை சில்க்ஸ் உரிமையாளருக்கும், நிர்வாகத்தினர்களுக்கும் ஊழியர்கள் தங்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.