சென்னையில் இன்று கடைகள் திறந்தவுடன் என்ன நடக்கும்? அதிர்ச்சி தகவல்

சென்னையில் இன்று கடைகள் திறந்தவுடன் என்ன நடக்கும்? அதிர்ச்சி தகவல்

இந்தியா முழுவதும் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக இந்தியாவின் ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

144 ஊரடங்கு உத்தரவு என்றால் அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருக்க வேண்டும் என்பதும் இரண்டு பேர்களுக்கு மேல் ஒரு இடத்தில் கூட கூடாது என்பதும் குறிப்பிடத்தக்கது

மருந்து பொருட்கள் பால் உள்பட அத்தியாவசியமான பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று காலை 5 மணியுடன் மக்கள் சுய ஊரடங்கு உத்தரவு சென்னை உள்பட தமிழகத்தில் நீங்கி உள்ள நிலையில் இன்று வழக்கம் போல் காலை கடை திறக்கப்பட்டன.

ஆனால் மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ள 75 நகரங்களில் சென்னையும் இருப்பதால் எந்த நேரமும் கடைகள் மூட வாய்ப்பு உள்ளது என்பதால் பொதுமக்கள் அதிக அளவில் அத்தியாவசியமான பொருட்களை வாங்கி குவிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது முக்கியமாக அரிசி உள்பட மளிகை சாமான்களையும் காய்கறிகளையும் அதிக அளவில் வாங்கி வீட்டில் ஸ்டாக் வைத்துக் கொள்ளவே மக்கள் முன்வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தேவைக்கு அதிகமாக பொருட்களை வாங்கி வைக்க வேண்டாம் என்றும் இதனால் மற்றவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு குறையும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது

Leave a Reply