ஆசிரியர் கொடுத்த டக்-வாக் தண்டனையால் பரிதாபமாக பலியான சென்னை மாணவன்
பத்து நிமிடம் பள்ளிக்கு தாமதமாக வந்ததால் டக்-வாக் எனப்படும் தண்டனையை ஆசிரியர் கொடுத்ததாகவும், இதன் காரணமாக அந்த மாணவன் மயங்கி விழுந்து மரணம் அடைந்ததாகவும் கூறப்படும் சம்பவத்தால் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சென்னை திருவிக நகரை சேர்ந்த முரளி என்பவரின் 2வது மகன் நரேந்திர், பெரம்பூரில் உள்ள டான்பாஸ்கோ பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். பொங்கல் விடுமுறைக்குபின் மாணவர் நரேந்திர், நேற்று பள்ளி சென்ற நிலையில் 10 நிமிடம் காலதாமதாக வந்ததால் நரேந்திரன் என்ற மாணவரை, டக்வாக் எனப்படும் வாத்துபோல் முட்டி போட்டு செல்லும் தண்டனையை உடற்கல்வி ஆசிரியர் ஜெயசிங் வழங்கியதாக கூறப்படுகிறது.
இதனால் நரேந்திரர் மயங்கி விழுந்ததாகவும், பின்னர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், ஆனால் சிகிச்சையின் பலனின்றி அந்த மாணவன் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த நரேந்திரர் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மாணவனுக்கு டாக்வாக் தண்டனை வழங்கிய உடற்கல்வி ஆசிரியர் ஜெயசிங் மற்றும் பள்ளி முதல்வர், தாளாளர் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என, பெற்றோர் உள்ளிட்டோர் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் விசாரணை நடத்தி இன்று காலைக்குள் கைது செய்வதாக அளித்த வாக்குறுதியின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.