சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் குருநாத் மெய்யப்பன் கடந்த ஐ.பி.எல் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டது உண்மை என சுப்ரீம் கோர்ட் நியமித்த கமிட்டை அறிக்கை கொடுத்திருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த வருடம் நடந்த ஐ,பி.எல் இறுதிப்போட்டியில் சூதாட்டம் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டு, அதுகுறித்து விசாரணை செய்ய உச்சநீதிமன்றம் ஹரியானா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியை நியமனம் செய்தது., அவர் இந்த குற்றச்சாட்டை முழுமையாக விசாரணை செய்து இன்று அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் குருநாத் மெய்யப்பன் சூதாட்டத்தில் ஈடுபட்டிருப்பது உண்மை என்றும், மேலும், ராஜஸ்தான் அணியின் தலைவரும் ஷில்பா ஷெட்டியின் கணவருமான ராஜ்குந்த்ராவுக்கும் இந்த சூதாட்டத்தில் தொடர்பு உண்டு என்றும் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இந்த அறிக்கையால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தற்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நாளை மறுநாள் வீரர்களின் ஏலம் தொடங்க உள்ள நிலையில் இந்த வழக்கு விசாரணை சென்னை அணிக்கு எதிராக திரும்பியுள்ளதால், வரும் 7வது ஐ.பி.எல் போட்டியில் விளையாட சென்னை அணிக்கு தடைவிதிக்கப்படுமா? என்ற கேள்வியும் வீரர்கள் மத்தியில் நிலவுகிறது.