நேற்று சென்னை சேப்பாக்க மைதானத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில் பஞ்சாப் அணியை பந்தாடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, முதலில் பீல்டிங் செய்ய தீர்மானித்தார். தொடக்க ஆட்டக்காரர்கள் ஸ்மித் மற்றும் மெக்கல்லம் ஆகியோர்களின் பொறுப்பான ஆட்டம் மற்றும் தோனியின் அதிரடி ஆட்டம் காரணமாக சென்னை அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 192 ரன்கள் குவித்தது. மெக்கல்லம் 66 ரன்களும், தோனி 41 ரன்களும், சுரேஷ் ரெய்னா 29 ரன்களும் எடுத்தனர்.
193 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி சென்ற பஞ்சாப் அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சேவாக் ஒரே ரன் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். பின்னர் ஜடேஜா, மற்றும் நெக்ரா, அஸ்வின் ஆகியோர்களின் அபார பந்துவிச்சினால் பஞ்சாப் அணி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுக்களை இழந்ததால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 95 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சென்னை அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி அடைந்தது. மெக்கல்லம் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.
நேற்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் மும்பை அணி ஐதராபாத் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
ஸ்கோர் விபரம்:
மும்பை அணி 20 ஓவர்களில் 157/8
சிம்மன்ஸ் 57
பொல்லார்டு 33
ரோஹித் சர்மா 24
ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 137/8
தவான் 42
ராகு 25
போபாரா 23
ஆட்டநாயகன்: மலிங்கா (4 விக்கெட்டுக்கள்)