விமானம் மூலம் பறந்த சென்னை வாலிபரின் கல்லீரல். 6 மணிநேரம் நடந்த ஆபரேஷன்.

liver surgeryசென்னையில் விபத்தில் மரணம் அடைந்த ஐ.டி.நிறுவனத்தில் பணிபுரியும் வாலிபரின்  கல்லீரல், விமானம் மூலம் கோவை எடுத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் ஒருவருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.
 
கடந்த 14ஆம் தேதி, சென்னை அண்ணா சாலையில் நடந்த சாலை விபத்து ஒன்றில் சிக்கிய  கிறிஸ்டோ சுகந்த் என்பவர் உயிருக்கு போராடிய நிலையில் சென்னை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் நேற்று அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் கூறியதை அடுத்து அவரது பெற்றோர்கள் தங்கள் மகன் கிறிஸ்டோ சுகந்த்தின் கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர்.
 
கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கல்லீரன் தானத்திற்காக காத்திருந்த ஒருவருக்கு சென்னை வாலிபரின் கல்லீரலை பொருத்த மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

அதன்படி, நேற்று கிறிஸ்டோவின் கல்லீரல் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது.
 
நேற்று மாலை 4 மணிக்கு தொடங்கிய கல்லீரல் மாற்று சர்ஜரி 8 முதல் 10 மணி நேரம் நடந்தது.  சர்ஜரிக்கு பின்னர் கோவை நபர் தற்போது நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
 
விமானம் மூலம் ஒருவருடைய கல்லீரல் எடுத்து செல்லப்பட்டு மற்றொருவருக்கு பொருத்துவது தமிழகத்தை பொருத்தமட்டில் இதுதான் முதல்முறை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மூளைச்சாவு ஏற்பட்ட நபரின் சிறுநீரகம் உள்ளிட்ட மற்ற உடல் உறுப்புகளும் அந்தந்த உறுப்புகளுக்காக காத்திருந்த சென்னை நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

Leave a Reply