சென்னையில் வாடகைக்கு குடியிருப்பவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணி தொடங்கியது

வாடகைக்கு குடியிருப்பவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணி சென்னையில் அனைத்து காவல் நிலையங்களிலும் தொடங்கியுள்ளது. சென்னையில் சமூக விரோத குற்றச் செயல்கள் நடப்பதைத் தடுக்க, வாடகை வீடுகளில் குடியிருப்பவர்கள் குறித்த விவரங்களை அந்தந்த பகுதிக்குட்பட்ட காவல் நிலையங்களில் வழங்க வேண்டும் என ஆணையர் ஜார்ஜ் அறிவித்தார். அதன்படி, அனைத்து காவல் நிலையங்களிலும் கணக்கெடுப்புப் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் அனைத்து காவல் நிலையங்களில் வழங்கப்படுகிறது. இணையதளத்தில் இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜனவரி 31-ம் தேதிக்குள் கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பப் படிவத்தின் மேல் பகுதியில் வீட்டு உரிமையாளரின் விவரங்களும், அதன் கீழ் வாடகைக்கு குடியிருப்பவர்களின் விவரங்களும் இடம் பெற வேண்டும்.

விண்ணப்பப் படிவங்களை வீட்டு உரிமையாளர்கள் காவல் நிலையங்களில் நேரில் ஒப்படைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தபால் மூலமாகவும் அனுப்பலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply