தமிழகத்தில் முன்னணி நாயகர்களாக விளங்கும் அஜீத், விஜய் மற்றும் சூர்யாவை பின்னுக்கு தள்ளிவிட்டு 2013ஆம் ஆண்டின் ‘மிகவும் விரும்ப்பப்படும் நாயகன்’ ( Most Desirable Man2013 ) என்ற பட்டத்தை நடிகர் ஆர்யா தட்டிச்சென்றுள்ளார். இந்த தகவல் அஜீத், விஜய் போன்ற நடிகர்களின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது. சமீபத்தில் குமுதம் வார இதழால் ‘அடுத்த சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டம் பெற்ற விஜய் இந்த கருத்துக்கணிப்பில் ஐந்தாவது இடமே பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டைம்ஸ் ஆப் இந்தியாவின் சென்னை பதிப்பகம் 2013ஆம் ஆண்டின் மக்களால் பெரிதும் விரும்பப்படும் நாயகன் என்ற கருத்துக்கணிப்பை ஆன்லைன் மூலம் ஒரு சர்வேயை எடுத்தது. இதில் கோலிவுட் மற்றும் சென்னையை சேர்ந்த பிரபலங்கள் வரிசைப்படுத்தப்பட்டனர். இந்த சர்வேயில் அஜீத் அல்லது விஜய்தான் முதலிடம் பெறுவார் என அனைவரும் எதிர்பார்த்திருக்கும் நிலையில் ஆர்யா முதலிடத்தை பெற்றது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பணம் கொடுத்த குமுதத்தின் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட விஜய்க்கு இந்த சர்வேயில் ஐந்தாவது இடமே கிடைத்துள்ளது. இந்த பட்டம் தனக்கு கிடைத்தது குறித்து தான் இன்ப அதிர்ச்சி அடைந்ததாகவும், இந்த பட்டத்திற்கு இனிமேல்தான் கடுமையாக உழைத்து தன்னை தகுதியுள்ளவனாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்றும் ஆர்யா கருத்து கூறியுள்ளார். அஜித் மற்றும் விஜய் இந்த சர்வே குறித்து கருத்துக்கள் எதுவும் கூறவில்லை.
2013ஆம் ஆண்டின் மிகவும் விரும்பப்படும் நட்சத்திரங்களின் சர்வே முடிவுகள்
1. ஆர்யா
2. சூர்யா
3. அஜீத்
4. தனுஷ்
5. விஜய்
6. சிம்பு
7.விக்ரம்
8. ஜீவா
9. விக்ரம் பிரபு
10. சித்தார்த்