இசைஞானிக்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்

இசைஞானிக்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்
ilaiyaraja
அனிருத் இசையில் ஆபாச வார்த்தைகள் கலந்த பீப் பாடலை சிம்பு பாடியதாக கூறப்படும் நிலையில் இந்த பாடலால் சிம்பு, அனிருத்துக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகினர்களுக்கே தலைக்குனிவாக கருதப்படுகிறது. இந்நிலையில் நேற்று இசைஞானி இளையராஜாவிடம் இந்த பாடல் குறித்து செய்தியாளர் ஒருவர் கருத்து கேட்டபோது அவர் அந்த நிருபர் மீது கோபம் அடைந்தார்.

‘உனக்கு அறிவு இருக்கா?, என்னிடம் கேள்வி கேட்க நீ யார்? என்கிற ரீதியில் நிருபர் மீது இளையராஜா கோபம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இளையராஜாவுக்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை பத்திரிகையாளர் சங்கம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னையில் சினிமா விழா ஒன்றில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் இளையராஜாவிடம், தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சிம்பு, அனிரூத்தின் பீப் சாங் பாடல் குறித்து சத்தியம் தொலைக்காட்சியின் நிருபர் கேள்விக்கு பதில் சொல்லாமல், என்னை கேள்வி கேட்க உனக்கு தகுதி இருக்கா, அறிவு இருக்கா என்று மிகவும் தரக்குறைவாக திட்டினார். இளையராஜாவின் தரக்குறைவான பேச்சையும், அவரின் செயல்பாடுகளையும் சென்னை பத்திரிகையாளர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

சிம்பு, அனிருத்தின் பீப் சாங் பாடல், பெண்களை மிக கேவலமாக சித்திரித்துள்ளதற்கு இசையமைப்பாளர் இளையராஜா வருத்தம் தெரிவித்து இருக்க வேண்டும். அதற்கு மாறாக கேள்வி கேட்ட நிருபரை தரக்குறைவாக பேசியது இளையராஜாவின் உண்மையான முகத்திரை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இளையராஜவின் பத்திரிகை சுந்தந்திரத்திற்கு எதிரான செயல்பாடுகளை கண்டித்து, சென்னை பத்திரிகையாளர் சங்கம் விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.

இவ்வாறு அந்த அறிகையில் கூறப்பட்டுள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் எரிகிற கொள்ளியில் எண்ணையை ஊற்றுவதுபோல் இன்னொரு இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன், ‘”ஒளிந்துகொண்டிருக்கிற நிஜ சொரூபத்தை வெளிக்கொணர்ந்த அந்த இளம் பத்திரிக்கையாளனை பாராட்ட வேண்டும்” என்று தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ilaiyaraja

Leave a Reply