சென்னை பல்கலையில் இலவச கல்வித்திட்டம் அறிவிப்பு
ஏழை எளிய மாணவ, மாணவியர்களுக்க்கான இலவச கல்வித் திட்ட அறிவிப்பு ஒன்றை சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ள இந்த அறிவிப்பில், ஏழை எளியய மாணவா்கள், இளநிலை பட்டப் படிப்புகளில் சோ்ந்து பயன்பெறும் வகையில் வரும் 2019-21ம் கல்வியாண்டு முதல் இலவச கல்வித் திட்டத்தை சென்னை பல்கலைக்கழகம் நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன் அடிப்படையில் 2018-19ம் கல்வியாண்டில் சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பல்கலைக்கழக இணைப்பு பெற்ற சுயநிதி மற்றும் அரசு உதவிபெறும் கல்லூாிகளில் இந்த இலவச கல்வித் திட்டத்தின் கீழ் சோ்க்கை பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மாணவரின் குடும்ப வருமானம் ஆண்டு ஒன்றுக்கு ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் விவரங்களை பல்கலைக்கழக மக்கள் தொடா்பு அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். அல்லது பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பிளஸ்-2 பொதுத் தோ்வு முடிவு வெளியிட்ட நாளில் இருந்து 15 நாள்களுக்குள் பல்கலைக்கழக பதிவாளா் அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.