சென்னை – மைசூர் வந்தே பாரத் ரயில் விபத்தா? அதிர்ச்சி தகவல்
கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் இருந்து மைசூர் வரை வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் நேற்று இரவு மைசூரில் இருந்து கிளம்பி சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் அரக்கோணம் சந்திப்பு அருகே திடீரென கன்றுக்குட்டி மீது மோதியதாக கூறப்படுகிறது.
இந்த விபத்து காரணமாக வந்தே பாரத் ரயிலின் முன் பக்கம் லேசான சேதம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் பயணிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை