ஏழாவது ஐ.பி.எல் தொடர் கிர்க்கெட் போட்டி அபுதாபியில் முதல்கட்டமாக முடிவடைந்து நேற்று முதல் இரண்டாவது கட்ட போட்டி ஆரம்பம் ஆனது. முதல் போட்டி ராஞ்சியில் சென்னை அணி மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின.
ஆட்டத்திற்கு முன்னர் லேசாக மழை பெய்ததால் ஆட்டம் சிறிதுநேரம் தடைபட்டது. இதனால் ஆடம் 17 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் செய்த சென்னை அணி 17 ஓவர்களில் 144 ரன்கள் குவித்தது. மெக்கல்லம் 56 ரன்கள், ரெய்னா 31 ரன்கள் , தோனி 22 ரன்கள் எடுத்தனர். கொல்கத்தா தரப்பில் ஷாகிப் அல் ஹசன் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி, சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 17 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 114 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் உத்தப்பா, மற்றும் யூசுப் பதான் மட்டுமே சிறிது நிலைத்து நின்று ஆடினர். கொல்கத்தா அணியின் 7 பேட்ஸ்மேன்கள் சேர்ந்து 21 ரன்கள் மட்டுமே எடுத்து தங்கள் விக்கெட்டுக்களை பறிகொடுத்தனர்.
இதனால் சென்னை அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஜடேஜா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அவர் அபாரமாக பந்துவீசி உத்தப்பா,பாண்டே,ஷாகிப் அலி ஹசன்,யாதவ் ஆகிய நான்கு முக்கிய வீரர்களை வெளியேற்றினார்.