ஐ.பி.எல் கிரிக்கெட்: மெக்கல்லம் அதிரடியால் சென்னை அணி அபார வெற்றி.

11

ஐ.பி.எல் போட்டிகள் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்த சென்னை மற்றும் மும்பை இடையிலான கிரிக்கெட் போட்டியில் மெக்கல்லத்தில் அதிரடி ஆட்டத்தால் சென்னை அணி மீண்டும் தனது வெற்றியை பதிவு செய்தது.

முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த மும்பை அணி, 20 ஓவர்களில் 141 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஷர்மா மற்றும் ஹிவ்வன்ஹாஸ் ஆகியோர்களின் அபார பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் மும்பை அணியினர் திணறினர். எம்.எம்.ஷர்மா 14 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி நல்ல தொடக்கத்தை கொடுத்தது. ஸ்மித் மற்றும் மெக்கல்லம் அடித்து விளையாடி அணியின் ஸ்கோரை பெருமளவு உயர்த்தினர். மெக்கல்லம் 53 பந்துகளில் 8 பவுண்டர்கள் மற்றும் 2 சிக்சர்களுடன் 71 ரன்கள் எடுத்தார். ஸ்மித் 21 ரன்களும், தோனி 14 ரன்களும் எடுத்தனர். இறுதியில் சென்னை அணி 19 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கள் மட்டுமே இழந்து 142 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

தொடர்ந்து மூன்று ஆட்டங்களில் வெற்றி பெற்ற சென்னை அணி 6 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. பஞ்சாப் அணி ரன்ரேட் விகிதத்தை அடிப்படையாக கொண்டு முதலிடத்தில் உள்ளது. கடைசி இடத்தில் பரிதாபமான நிலையில்மும்பை அணி உள்ளது.

 

Leave a Reply