லண்டன் கவுன்சிலராக தேர்வு பெற்ற சென்னையை சேர்ந்த பெண் தொழிலதிபர்

லண்டன் கவுன்சிலராக தேர்வு பெற்ற சென்னையை சேர்ந்த பெண் தொழிலதிபர்

இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் உலகம் முழுவதிலும் பெரிய பெரிய பதவிகளில் வகித்து வரும் நிலையில் லண்டன் மாநகராட்சியில் கவுன்சிலராக சென்னையை சேர்ந்த பெண் தொழில் அதிபர் ரெஹானா அமீர் தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

லண்டன் மாநகராட்சி தேர்தலில் விண்ட்ரை என்ற வார்டில் சுயேட்சையாக களமிறங்கிய ரெஹானா அமீர் அபார வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் லண்டன் மாநகராட்சியில் கவுன்சிலரான முதல் இந்திய பெண் என்ற பெருமையை அவர் தட்டிச்சென்று உள்ளார்

தனக்கு வெற்றியை கொடுத்த விண்ட்ரை பகுதி மக்களிடம் பேசிய ரெஹானா அமீர், ‘கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் நான், சாலை பாதுகாப்பு, காற்றை தூய்மைபடுத்துதல், மன ஆரோக்கியம் உள்ளிட்ட விஷயங்களில் முக்கிய கவனம் செலுத்துவேன். மேலும் அனைத்து வகையான தொழில்களுக்கும் சிறந்த பிரதிநிதித்துவம் அளிப்பேன். லண்டன் நகரின் தொழில்களை சர்வதேச சந்தைகளில் ஊக்கப்படுத்துவதோடு, கடல் கடந்து விரிவுபடுத்துவேன் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்

Leave a Reply