நூதன முறையில் நடிகர், நடிகைகளை ஏமாற்றிய சென்னை இளம்பெண்

நூதன முறையில் நடிகர், நடிகைகளை ஏமாற்றிய சென்னை இளம்பெண்

சென்னையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் உலக சுற்றுலாவிற்கான விமான டிக்கெட்டுக்களை சலுகை விலையில் பெற்று தருவதாககூறி லட்சக்கணக்கில் ஏமாற்றிய அதிர்ச்சி தரும் மோசடி ஒன்று தற்போது வெளிவந்துள்ளது. இந்த பெண் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமா நடிகர்களான ஸ்.வி.சேகர், மிர்ச்சி சிவா மற்றும் பாடகர் தேவன் ஏகாம்பரம் உள்பட பல நடிகர், நடிகைகள் மற்றும் பிரபலங்களிடம் சலுகை விலை விமானப் பயணச்சீட்டு பெற்றுத் தருவதாகக்கூறி சுவேதா சுரேஷ் என்றா 26 வயது சென்னை இளம்பெண் மோசடி செய்துள்ளார்.

பல பிரபலங்களிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்று அவர்களுக்கு காலாவதியான டிக்கெட்டுக்களை வழங்கியுள்ளார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில் சுவேதா சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்

இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முதலில் இவர் சில பயணச்சீட்டுகளை சலுகை விலையில் உண்மையிலேயே வாங்கித்தந்து தன்மீது நம்பிக்கையை ஏற்படுத்திவிடுவாராம். பின்னர் மீண்டும் அதே நபரிடம் பெரும் தொகையை முன்பணமாகப் பெற்றுக்கொண்டு மாயமாகிவிடுவாராம். கடந்த இரண்டு ஆண்டுகளில் பல பிரபலங்களை ஏமாற்றிய இவர் சென்னையில் தான் வசிக்கும் வாடகை வீட்டை 20 முறை மாற்றி டிமிக்கி கொடுத்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Leave a Reply