ஐ.எஸ்.எல் கால்பந்து: கடைசி நிமிட அதிர்ஷ்டத்தால் தோல்வியில் இருந்து தப்பிய சென்னை அணி.

chennaiyin fcசென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற்ற இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் கடைசி நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பு காரணமாக சென்னை அணி தோல்வியில் இருந்து தப்பியது.

நேற்று நடைபெற்ற  21-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.- அட்லெடிகோ டீ கொல்கத்தா அணிகள் மோதின.

ஆட்டத்தின் முதல் நிமிடத்தில் இருந்தே பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் ஆட்டத்தின் 35-வது நிமிடத்தில் கொல்கத்தாவுக்கு வழங்கப்பட்ட பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கொல்கத்தா வீரர் லூயிஸ் கார்சியா ஒரு கோலை மிக எளிதாக போட்டார்.

இந்த கோலுக்கு பதிலடி கொடுக்க தொடர்ந்து வரிந்து கட்டிக்கொண்டு ஆடிய சென்னை அணியினர்களுக்கு கடைசி வரை கோல் போட வாய்ப்பு அமையாத நிலையில் கடைசி நிமிடத்தில் சென்னை அணி மீது அதிர்ஷ்ட காற்று வீசியது.

கொல்கத்தா வீரர் கிங்சுக் பலமாக உதைத்ததில் சென்னை வீரர் வலேன்சியா கீழே விழுந்து வலியால் துடித்தார். இதையடுத்து கிங்சுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டதுடன் சென்னை அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பில் சென்னை அணியின் நட்சத்திர வீரர் இலனோ கோல் அடிக்க, மைதானத்தில் ரசிகர்களின் ஆரவாரம் காதை பிளந்தது. திரிலிங்கான இந்த ஆட்டம் 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.

இந்த தொடரில் ஒவ்வொரு ஆட்டத்திலும் கோல் போட்டு வரும் சென்னை வீரர் இலனோ (பிரேசில் நாட்டவர்) இதுவரை 6 கோல்கள் அடித்து முதலிடம் வகிக்கிறார்.

Leave a Reply