இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் நேற்றைய போட்டியில் சென்னை அணி, மும்பை அணியை 5-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை அணியின் மேலாளர் மார்கோ மேடரஸி, முதல் முறையாக களம் புகுந்தார். மும்பை அணி வீரர்களின் மோசமான ஆட்டத்தை பயன்படுத்திக்கொண்ட சென்னை வீரர்கள் அடுத்தடுத்து ஐந்து கோல்கள் போட்டு அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
சென்னை அணி வீரர்கள் ஆட்டத்தின் 6வது நிமிடத்திலும், 23வது நிமிடத்திலும், 40 வது நிமிடத்திலும், 42வது நிமிடத்திலும், 68வது நிமிடத்திலும், அடுத்தடுத்து கோல் போட்டு அசத்தினர். சென்னை அணி வீரர்களின் அபார ஆட்டத்திற்கு முன்னர் மும்பை அணி வீரர்கள் திணறினர். பின்னர் கடைசியாக ஆட்டட்த்தின் 87வது நிமிடத்தில் மும்பை வீரர் சையத் ரஹிம் நபி ஒரே ஒரு ஆறுதல் கோல் போட்டார்.
சென்னை அணி இந்த வெற்றியின் முலம் 9 புள்ளிகளுடன் 2 வது இடத்தில் உள்ளது.