தேவையான பொருட்கள் :
மீன் – 1 /2 கிலோ
மிளகாய்த்தூள் – 4 ஸ்பூன்
தனியாத்தூள் – 5 ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1 ஸ்பூன்
எலுமிச்சம்பழம் – 1
மிளகு – 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
கடுகு – 1 ஸ்பூன்
கடலைப்பருப்பு – 3 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 3 ஸ்பூன்
கருவேப்பிலை – 2 கொத்து
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
மீனை நன்கு சுத்தம் செய்து கழுவி வைத்துக் கொள்ளவும். மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு, எலுமிச்சம்பழச்சாறைப் பிழிந்து பேஸ்ட் போல செய்து கொண்டு, அதில் மீனை நன்கு ஊற வைத்துக் கொள்ளவும். குறைந்தது 1 மணி நேரமாவது ஊற வைக்கவும்.
மிளகு, காய்ந்த மிளகாய், கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை ஆகியவற்றை கடபயில் எண்ணெய் விடாமல் வறுத்து, ஆற வைத்து பொடி செய்து கொள்ளவும்.
ஊற வைத்துள்ள மீனை இந்த அரைத்து வைத்துள்ள மசாலாவில் இரண்டு புறமும் பிரட்டி எடுத்து கடாயில் அல்லத தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து நன்கு சிவக்க பொரித்தெடுக்கவும்.