செட்டிநாடு கத்திரிக்காய் வறுவல்

e18763d0-8c2a-4cd4-bf81-449fc5d2e40f_S_secvpf

தேவையான பொருட்கள்:

சின்ன கத்திரிக்காய் – 8

கடுகு – 1/2 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்

கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிது

மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

பொடி மசாலாவிற்கு :

கடலைப் பருப்பு – 3 டேபிள் ஸ்பூன்

தனியா – 1 டேபிள் ஸ்பூன்

எள் – 2 டீஸ்பூன்

வரமிளகாய் – 7

மிளகு – 1/2 டீஸ்பூன்

புளி – சிறிய துண்டு

தேங்காய் – 1/4 கப்

வேர்க்கடலை – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

• முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பொடி மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்து, அவற்றை மிக்ஸியில் போட்டு சிறிது உப்பு சேர்த்து நன்கு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

• கத்திரிக்காயை நீரில் கழுவி, மேல் உள்ள காம்பை முற்றிலும் நீக்காமல், பாதியாக வெட்டிவிட்டு, பின் பூமொட்டு விரிவது போன்று 4-6 ஆக கீறிக் கொள்ள வேண்டும். பின்பு அதில் பொடித்து வைத்துள்ள பொடியை கத்திரிக்காயின் உள்ளே தூவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

• ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் அதில் கத்திரிக்காய்களைப் போட்டு, மஞ்சள் தூள் மற்றும் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு நிறம் மாறும் வரை கிளறி விட வேண்டும். பின் அதில் சிறிது தண்ணீர் தெளித்து, மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

• கத்திரிக்காயானது நன்கு வெந்ததும், அதில் மீதமுள்ள பொடி மசாலாவைத் தூவி கிளறி, சற்று மொறுமொறுவென்று வந்த பின், அதனை இறக்கினால், செட்டிநாடு பொடி கத்திரிக்காய் வறுவல் ரெடி!

Leave a Reply