நிறைய பேருக்கு எப்போதும் சூயிங் கம்மை மெல்லும் பழக்கம் இருக்கும். அப்படி சூயிங்கம் மெல்லும் பழக்கத்தினால் நிறைய பிரச்சனைகள் உடலில் ஏற்படும். வாயில் உள்ள தசைகளுக்கு அளவுக்கு அதிகமாக வேலை கொடுத்தால், அதனால் மூட்டுகளில் பிரச்சனைகள் அதிகமாகும்.
அதிலும் சூயிங் கம்மை தொடர்ந்து மென்றவாறு இருந்தால், அதனால் தாடையை மண்டையுடன் இணைக்கும் மூட்டுகள் மற்றும் தசைகளில் கடுமையான வலியை ஏற்படுத்தும். சூயிங் கம்மை அதிக அளவில் மெல்லுவதால், அளவுக்கு அதிகமான காற்றை உள்ளிழுக்கக்கூடும். இதன் மூலம் வயிற்று உப்புசம் மற்றும் அடிவயிற்றில் வலி ஏற்படக்கூடும்.
அதுமட்டுமல்லாமல் செரிமான பிரச்சனை மற்றும் நெஞ்செரிச்சலும் ஏற்படக்கூடும். சூயிங் கம் மெல்லும் பழக்கம் உள்ளவர்களுக்கு அடிக்கடி கடுமையான தலை வலி ஏற்படக்கூடும். இதற்கு அதில் உள்ள பதப்படுத்தும் பொருள், செயற்கை சுவையூட்டிகள் போன்றவை தான் காரணம். சூயிங் கம் மெல்லுவது பற்கள் மற்றும் ஈறுகளுக்கு நல்லது தான் என்றாலும், அளவுக்கு அதிகமாகும் போது, அதுவே பற்கள் மற்றும் ஈறுகளுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்.
இதற்கு அதில் உள்ள சர்க்கரை படலம் தான் காரணம். அந்த சர்க்கரையானது வாயில் உள்ள பாக்டீரியாக்களுக்கு நல்ல உணவாக அமைந்து, அதனால் அந்த பாக்டீரியாக்கள் பற்கள் மற்றும் ஈறுகளை தாக்குகிறது. உண்மையிலேயே சூயிங் கம் மெல்லும் பழக்கம் உள்ளவர்களுக்கு, அடிக்கடி வயிற்றுப் போக்கு ஏற்படும். ஏனெனில் அதில் சேர்க்கப்படும் செயற்கை சுவையூட்டிகளான மேனிடால் மற்றும் சோர்பிடால், குடலில் இடையூடை ஏற்படுத்தும்.
இப்படி தொடர்ந்து குடலில் இடையூறு ஏற்பட்டால், அதனால் வயிற்றுப்போக்கு மற்றும் உடல் வறட்சி ஏற்படக்கூடும். சில மக்கள் பற்களில் உள்ள ஓட்டையை மெர்குரி, சில்வர் மற்றும் டின் போன்றவை கொண்டு அடைத்திருப்பார்கள். இப்படி அடைத்திருக்கும் போது சூயிங் கம்மை அளவுக்கு அதிகமாக மெல்லுவதால், பற்களில் உள்ள மெர்குரி வெளிப்பட்டு, உடலினுள் சென்று, மோசமான விஷமான மாறி, நாளடைவில் அதுவே பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்.